Reading Time: < 1 minute

சீன கோவிட் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

சீனப் பிரஜைகள் கோவிட் பரிசோதனையின் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற அமெரிக்காவின் நடைமுறையை தற்போதைக்கு பின்பற்றப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் கனடாவில் கோவிட் குறித்த பயணக் கட்டுப்பாடுகள் பாரியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் சீனாவில் தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், கனடாவின் பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது.

கோவிட் பரவுகை காரணமாக புதிய திரிபுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் கோவிட் நிலைமைகள் அவதானிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.