Reading Time: < 1 minute

கிளிமஞ்சாரோ மலைப் பகுதியில், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலைப்பகுதி முன்னணி சுற்றுலா தலமாக விளங்கிவரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்குவந்து மலையேறுவதும், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபடுவதும் வழக்கம்.

இந்தநிலையில் கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலா பயணி, மலை உச்சியில் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

தரையிறக்கும் முயற்சியாக தான் அணிந்திருந்த பரசூட்டை அவர் இயக்கியுள்ளார்.

எனினும், தக்க சமயத்தில் பாராசூட் இயங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், சுமார் 20 ஆயிரம் அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.