Reading Time: < 1 minute

லண்டன் பகுதியில் பெண்னொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை அடையாளம் காண, லண்டன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், நடுத்தர உடற் தோற்றம், 5 அடி 10 அங்குலம், முழு முகம் கொண்ட மோட்டார் சைக்கிள் அணித்திருந்தார் என பொலிஸார் விபரித்துள்ளனர்.

மைட்லேண்ட் வீதிக்கு அருகிலுள்ள டன்டாஸ் வீதியில் ஒரு பெண் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரை அணுகியதாகவும், அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சில கருத்துக்களை தெரிவித்ததோடு, பின்னர் அவளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார், கூறுகின்றனர்.

பின்னர் அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு, கிழக்கு நோக்கி டன்டாஸிற்கு சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அவரை அடையாளம் காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.