Reading Time: < 1 minute

கனடாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்த மீது 20 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே என்ற குறித்த பெண், நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக செயற்பட்டதுடன், இவர் வெளிநாடுகளின் போதனைகளுக்கு செல்லும் நித்யானந்தாவின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டார்.

இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். இந்து மதத்தின் மீதான ஈர்ப்பால் 2015-ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு வந்த சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் அங்கேயே தங்கியிருந்தார்.

ஆசிரமத்தில் ஆன்மிக தொண்டு செய்வோருக்கு வழங்கப்படும் பெயரைப் போலவே சாராவும், மா நித்யா சுதேவி என்று அழைக்கப்பட்டார்

ஆசிரமத்தில் சேர்ந்த சாரா ஆரம்ப காலங்களில் சிஷ்யையாக இருந்துடன் அதன் பின் அவருக்கு படிப்படியாக பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டதால், பிடதி ஆசிரமம் மற்றும் நித்தியானந்தாவின் சமூக வலைத்தள கணக்குகளை எல்லாம் பராமரிக்கும் பொறுப்புகள் சாராவுக்கு வழங்கப்பட்டது.

இதனால் ஆசிரமத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கையை பெற்ற சாராவுக்கு கடந்த 2018-ல் நித்யானந்தா மூலம் பல கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

நித்யானந்தாவிடம் இருந்து பல்வேறு ஆபாசமான குறுந்தகவல்கள் மட்டுமின்றி பல ஆபாசப் படங்களும் வந்ததாகவும், முதலில் அதிர்ந்து போன சாரா, ஒருவேளை தவறுதலாக வந்திருக்கலாம் என நினைத்து அதை தவிர்த்துள்ளார்.

ஆனால் ஆன்மிக பிரசாரத்துக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்கு சாரா சென்ற போது அங்கு அதிர்ச்சி காத்துள்ளது.

ஏனெனில் அங்கு ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து கண்ணீர் மல்க சாராவிடம் முறையிட்டுள்ளனர்.

இதை பார்த்து அதிர்ந்து போன சாரா, இது குறித்து ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவிடம் கேள்விகள் எழுப்பியதோடு, ஆசிரமத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலம் ராம்நகர் காவல் நிலையத்தில் 20 பக்கங்கள் கொண்ட பரபரப்பான முறைப்பாட்டு மனுவை அளித்திருக்கிறார்.

அதில் நித்யானந்தா தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாகவும், ஆன்மீகம் என்ற பெயரில் அவர் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்டோரிடம் அத்துமீறுவதாக குறிப்பிட்டுள்ளார்.