Reading Time: < 1 minute
Tamil Business Directory
டொரோண்டோவில் தமது தொடரூந்து நிலையங்களில், டிக்கட்டுகள், டோக்கன்கள், மாதாந்த அட்டைகள் போன்றவற்றின் விற்பனைகள் அனைத்தும் இந்த மாதத்துடன் நிறுத்தப்படுமென, TTC அறிவித்துள்ளது.
எனினும், TTC அல்லாத விற்பனை நிலையங்களில், அவை தொடர்ந்தும் விற்கப்படும். முழுமையாக PRESTO அட்டைகளின் பாவனையை அமுல்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனினும், டிக்கட்டுகள், டோக்கன்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இறுதி நாள் எதுவும் இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் TTC தெரிவித்துள்ளது.




