Reading Time: < 1 minute

கனடாவில் இணையம் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக நாட்டில் தொலைதொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் குறைவாகவே அறவீடு செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக குறைவடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தேசிய பணவீக்கத்தில் ஏற்பட்ட குறைவிலும் தொலைதொடர்பு கட்டண வீழ்ச்சி தாக்கம் செலுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்னதாக தொலைபேசி கட்டணத்திற்காக செலுத்திய தொகையிலும் 26.5 வீதமான தொகையே இந்த ஆண்டில் தொலைபேசி கட்டணமாக செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண்ஙகளை குறைத்துள்ளதுடன் வழங்கும் டேட்டாவின் அளவினையும் அதிகரித்துள்ளன.

தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டண வீழ்ச்சியானது பணவீக்கத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.