Reading Time: < 1 minute

கனடாவில் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எப்பொழுது வட்டி வீதங்கள் குறைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் கனடிய மத்திய வங்கி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மத்தியல் ஒருமித்த கருத்து இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நிலைமை மற்றும் பணவீக்கம் என்பன தொடர்பிலான தீர்மானங்களின் அடிப்படையில் வங்கி வட்டி வீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வங்கி வட்டி வீதம் ஐந்து வீதமாக காணப்படுகின்றது. உரிய அவதானிப்புக்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் வங்கி வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் என மத்திய வங்கியின்ஆளுனர் ரிம் மெக்கலம் தெரிவித்துள்ளார்.