Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை பைடன் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடா விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் (Justin Trudeau) ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் கனடிய நாடாளுமன்றில் பைடன் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

வட அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

அண்மையில் சீன உளவு பலூன்கள் அமெரிக்க, கனடிய பரப்பிற்குள் பறந்த விவகாரத்தின் பின்னர் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளன.

கனடாவின் இராணுவ செலவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.