Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், ஊழியர்களுக்கு ஆறு பில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க நேரிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பில்124 என்ற சட்ட மூலம் சம்பள அதிகரிப்பினை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு வீதமாக உயர்த்தும் வகையில் யோசனை முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும், இந்த யோசனை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எனவே ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நட்டஈடாக ஆறு பில்லியன் டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.