Reading Time: < 1 minute

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்க 16 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்த சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட மத்திய வங்கிகளின் தலைவர்களும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிப்படையான அரச இயந்திரமொன்றை ஸ்தாபிப்பது உட்பட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதை முதற்கட்டமாக செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதுடன் ஏனைய இரண்டு அம்சங்களை படிப்படியாக அமல்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்றவற்றில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கான செயன்முறை நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் இவ்விரு விடயங்களையும் நிறைவு செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.