Reading Time: < 1 minute

டொரோண்டோ ஸ்கார்பாரோ நகரில் இயங்கிவரும் வாகன விபத்து சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனம் “மெலனி டேவிட் சட்ட நிறுவனம்” (Law Offices of Meleni David) மீது டொரோண்டோ மாநகர போக்குவரத்து சபை (TTC) $ 1.5 மில்லியனுக்கு இழப்பீடு வழக்கு தொடுத்துள்ளது .

பஸ் மற்றும் வாகன விபத்துக்கள் சம்பந்தப்பட்ட மோதல்களின் பாதிக்கப்பட்டவர்கள் என்று போலியான செலவு கணக்குகளை காட்டி; முறையாக மருத்துவ உதவியோ , வேறு உதவிகளோ வழங்கப்படாமல், அதற்குரிய ஆதாரங்களை போலியாக தயாரித்து 10 ஆண்டுகளாக டிரான்ஸிட் நிறுவனத்தை மோசடி செய்ததற்க்காகவே இந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜனவரி 24, 2017 தேதியிட்ட ஒரு கூற்றுப்படி, TTC மற்றும் அதன் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் தாக்கல் செய்யப்படும் நட்டஈடுகள் “மெலனி டேவிட் சட்ட அலுவலகம் சமர்ப்பிக்கும் கணக்குகள் உண்மையிலேயே வீட்டு பராமரிப்பு மற்றும் பிற செலவினங்களுக்காக செலவழித்ததாக கூறும் பணம் உண்மையில் விபத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.

பிழையான தரவுகளையும், ஆதாரங்களையும் போலியாக சமர்ப்பித்து காப்புறுதி மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெலனி டேவிட் மற்றும் அவரது ஊழியர்கள் பணியாளர், வீட்டு பராமரிப்பு, அல்லது பிற சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் வெற்று படிவங்களை கையொப்பமிட்டுக் கொண்டு ஊழல் செய்ததாக ஏஜென்சி குற்றம்சாட்டியுள்ளது.

இவர்கள் சேவைவழங்கியதாக காட்டிய பல பற்றுச்சீட்டுகள் இவர்களாலேயே போலியாக வெட்டி ஒட்டப்பட்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு கொடுத்து பணத்தைமெலனி டேவிட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வழங்கிய வீட்டு பராமரிப்பாளர் பற்றுச்சீட்டுகளில் உள்ள கம்பெனிகளுக்கு காப்புறுதி நிறுவனம் தொடர்புகொண்டபோது; அப்படி ஒரு சேவையை தாம் வழங்கவில்லை என்றும் அது அவர்களுக்கு தெரியாமல் போலியாக மெலனி டேவிட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் காப்புறுதி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

TTC நிறுவனமானது தனக்கான காப்புறுதியை தானே வைத்திருக்கின்றது. வருட TTC யின் வரவு செலவு கணக்கிலேயே இப்படியான இழப்புகளும் ஈடுசெய்யப்படுகின்றன. இப்படியான மோசடிகளால் TTC யானது இழக்கின்ற பணம் அனைத்தும் அதன் பயணிகள் தலையிலேயே சுமத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நிறுவனப்படுத்தப்பட்ட மோசடிகளில் சாதாரண பொது போக்குவரத்தை பாவிக்கும் மக்களே இதனால் தினமும் பாதிப்படைகின்றனர்.

Source: TheStar

https://www.thestar.com/news/gta/2018/05/28/ttc-accuses-personal-injury-law-firm-of-filing-fraudulent-accident-claims.html