Reading Time: < 1 minute

பிரதமர் லீ சியென் லூங் (சிங்கப்பூர்) தைப்பூசத் திருவிழாவை கொண்டாடுவோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியைத் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வழி பிரதமர் லீ பகிர்ந்து கொண்டார்.

இன்று தைப்பூசத் திருவிழா, வீரத்தையும் இளமையையும் குறிக்கும் கடவுளான முருகனைக் கொண்டாடும் நாள்.

பொதுவாகத் தைப்பூசத்தின் போது கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பால் குடங்களையும், வண்ண வண்ணக் காவடிகளையும் பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.

தற்போது COVID-19 சூழல் காரணமாக பாத ஊர்வலம் இடம்பெறவில்லை.

இருப்பினும் முன்பதிவு செய்தவர்கள் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்திற்குப் பால்குடம் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா கட்டுப்பாடுகளுடன் அமைதியாக நடைபெறுகிறது. இருப்பினும், பக்தர்கள் தங்களுக்கு ஏற்ற வழிகளில் பக்தியை வெளிக்காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

என்று பிரதமர் குறிப்பிட்டார்.