Reading Time: 3 minutes

கனடாவில் முதியோர் நீண்டகால பராமரிப்பு மைய கட்டமைப்புக்களில் உள்ள தோல்விகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

கனேடிய பொதுமன்ற அமர்வில் நேற்று மெய்நிகர் வழியில் பங்கேற்றுப் பேசும்போதே அவா் இவ்வாறு வலியுறுத்தினார்.

கனடாவில் முதியோர் நீண்டகால பராமரிப்பு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இறந்துள்ளதுடன், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயின் முதல் அலையின்போது பல நூற்றுக்கணக்கான முதியவர்கள் கவனிப்பின்றி கைவிடப்பட்டு பெரும் அவலங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் இவ்வாறான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாமல் நீண்டகால முதியோர் பராமரிப்பு மையங்களில் தற்போது நடைபெற்று வருவது போன்ற நெருக்கடிகளை எம்மால் தவிர்க்க முடியாது எனவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முதியோர் பராமரிப்பு மையங்களில் தேசிய அளவில் ஒரே சிறப்பான பராமரிப்பு கட்டமைப்புக்களை நிறுவுவதற்கு மாகாணங்களும் பிரதேசங்களும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ஹரி ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் பிரின்ஸ் எட்வர்ட் தீவு அல்லது ஒன்ராறியோவில் வசிப்பவர்களை விட வேறுபட்ட தரமான பராமரிப்பில் இருப்பதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்கள் எதுவும் இல்லை. முதியோர் பராமரிப்பு மையங்களில் தேசிய அளவில் ஒரே அளவான தர நிலை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தரங்களைப் பாதுகாக்க, கனடாவின் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதன்மூலம் தமது பராமரிப்பில் உள்ள மூத்தவர்களை புறக்கணிப்பவர்களை வெளிப்படையாக தண்டிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

அறிந்துகொண்டே எங்களின் மூத்தவர்களை ஆபத்தில் ஆழ்த்துவோர் தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ளும் கலாசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை தொடர்வது வெட்கக்கேடானது. இந்த அதிகார துஷ்பிரயோகம் தொடரக்கூடாது.

நீண்ட கால பராமரிப்பு மையங்களின் மோசமான நிலை குறித்து அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக இடம்பெற வேண்டும். நீண்டகால பராமரிப்பு மையங்களில் வசிப்போர், அதன் ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முதியவர்களின் குடும்பத்தினரை உள்ளடங்கியதாக விசாரணைப் பொறிமுறை அமைய வேண்டும்.

ஒன்ராறியோவைப் போலவே அரசாங்கங்கள் உருவாக்கும் ஆணைக்குழுக்களால் மட்டும் இந்த நெருக்கடி குறித்து போதுமான முழுமையான விசாரணையை முன்னெடுக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது எனவும் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

கோவிட்19 தொற்றுநோய் நெருக்கடி முடிவுக்கு வந்ததும் நாங்கள் உணவகங்களுக்குத் திரும்பத் தொடங்குவோம். எங்கள் நண்பர்களுடன் மீண்டும் ஒன்றிணைவோம் அல்லது கடற்கரைக்கு ஓய்வெடுக்கச் செல்வோம். ஆனால் அப்போதும் முதியோர் நீண்ட கால பராமரிப்பு மையங்களில் எங்கள் மூத்தவர்கள் இருப்பார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடு முழுவதும் முதியோர் இல்லங்களில் தற்போதுள்ள பராமரிப்புத் தரங்களை கணிசமாக உயர்த்துவது நம்முடைய பொறுப்பு என்பதை நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

நீண்ட கால பராமரிப்பு மையங்களில் உள்ள எங்கள் மூத்தவர்கள் சிறப்பான வாழ்க்கைத் தரத்தைப் பெறத் தகுதியானவர்கள். ஏனெனில் அவர்கள் எங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி, அயலவர்கள் அல்லது நண்பர்கள் என்பதால் மட்டும் அல்ல. அனைத்துக் கனேடியர்களுக்கும் உள்ள கண்ணியம், மரியாதை மற்றும் கவனிப்பு ஆகியவற்றை பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.

இப்போது நாம் செயற்படாவிட்டால் தொற்று நோயின்போது நாங்கள் அனைவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி முடிவுக்கு வந்தாலும் அவா்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடரும் எனவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

Video

https://www.facebook.com/garyforsrp/videos/257894752439588

Without significant structural reforms capable of addressing the inherent failures within Canada’s long-term care sector, we will not cure the ongoing crises within these facilities.

Provinces and territories need to work together with the federal government to establish national stands of care. There is no acceptable reason why a long-term care residents in British Columbia is held to a different standard of care than one living in Prince Edward Island or Ontario. National standards will enshrine the decency our most vulnerable deserve.

To protect these standards, amendments must be made to Canada’s Criminal Code which explicitly penalize those who neglect seniors under their care and willingly put them in danger. The startling rise of legislation designed to create a culture of impunity and inhibit justice from the families of victims is shameful. This abuse of power must not continue.

Finally, all inquires into the state of long-term care must be public, independent, and led by panels which include residents, staff, and families of survivors. It has become increasingly clear that government-led commissions, like those in Ontario, are incapable of producing a sufficiently thorough investigation into this crisis.

When the #COVID19 pandemic is over and we begin returning to restaurants, reuniting with our friends, or relaxing at the beach, the women and men in long-term care will remain in these facilities.

As legislators, it is incumbent upon us to significantly elevate the existing standards of care across the country. The women and men in long-term care are worthy of a higher standard of living not because they are our parents, grandparents, neighbours, or friends, but because they are endowed with the same equal and inherent right to dignity, respect and care as all Canadians.

When our crisis is over their crisis will continue, unless we act—now.