Reading Time: < 1 minute

கனடாவில் வங்கிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளனர்.

கனடாவில் இயங்கி வரும் முன்னணி ஊடக நிறவனமொன்று இது பற்றிய விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளது, வங்கிப் பணியாளர்கள், வங்கியின் வாடிக்கையாளர்களை பிழையாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய வங்கிகள் பலவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக இரகசிய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

வங்கி நிர்வாகங்கள் அறிவிக்கும் விற்பனை சார் இலக்குகளை எட்டுவதற்காக இவ்வாறு வாடிக்கையாளர்கள் பலிக்கடா ஆக்கப்படுகின்றனர்.

தங்களது நிறுவன உற்பத்திகளை விற்பனை செய்து கொள்வதற்காக வங்கிப் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் பொய்யுரைப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களக்கு பொருத்தமற்ற நிதியியல் உற்பத்திகளை பிழையான தகவல்களை வழங்கி அவர்களுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லாபத்தை ஈட்டும் நோக்கில் வங்கி அதிகாரிகள் பணியாளர்கள் மீது இவ்வாறு விற்பனை இலக்குகளை நிர்ணயித்து அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் அழுத்தம் காரணமாக வங்கிப் பணியாளர்கள் இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கி மேலதிகாரிகள் பணியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கி வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.