Reading Time: < 1 minute

நாடு கடந்த அரசின் முன்னாள் கல்வி, கலாச்சார மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர். இராம் சிவலிங்கம் கனடாவில் காலமானார்

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களம் தமிழரின் போராட்ட வலுவை முற்றுமுழுதாக அழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டிருந்தவேளை, உலக அளவில் தமிழரின் அரசியலை கொண்டுசெல்ல உருவாக்கப்பட்ட பெரும் முயட்சியே நாடு கடந்த தமிழீழ அரசு. இந்த மிகப்பெரிய சவாலான காலப்பகுதியில் தனது முழுமையான நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணித்து நாடுகடந்த அரசை உருவாக்கி 2010 இல் முதலாவது அரசவையை நடத்திக்காட்டியதில் டாக்டர் .இராம் சிவலிங்கம் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

Ram Sivalingam TGTE First Election 2010

முதலாவது அரசவையில் நாடு கடந்த அரசின் கல்வி, கலாச்சார சுகாதார அமைச்சர் பதவிகளை ஏற்ற டாக்டர். இராம் சிவலிங்கம் அவர்கள் தனது முதிய வயதிலும் சிறப்பாக செயல்பட்டார்.

தமிழ் சமூக மட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார், ஆரம்பத்தில் லண்டன் (England) மற்றும் தற்போது கனடா ஆகிய இடங்களில் பல்வேறு தமிழ் சமூக அமைப்புகளுடன் மக்களுக்காக சேவை புரிந்தவராவார்.