Reading Time: < 1 minute

Ontario முதல்வர் Doug Ford, 22 மொழிகளில் ‘வீட்டில் இருங்கள்” என்ற செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) 22 வெவ்வேறு மொழிகளில் பேசும் வீடியோ செய்தியை இன்று வெளியிட்டுள்ளார்.

டக் ஃபோர்டு (Doug Ford) இன்று வியாழக்கிழமை காலை ட்விட்டரில் வீடியோ செய்தியை வெளியிட்டார். ஒண்டாரியோவில் வசிப்பவர்களை “வீட்டில் இருங்கள்” மற்றும் “பாதுகாப்பாக இருங்கள்” என்று சொல்கின்றார்.

“நீங்கள் எந்த மொழியைப் பேசினாலும் நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்று ஃபோர்டு கூறினார்.

மாகாண அரசு ஜனவரி 14 ஆம் தேதி முதல் மாகாணத்திற்கான வீட்டில் இருக்கும் அவசரகால நிலையை அறிவித்தது.

இந்த உத்தரவு குறைந்தது 28 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்த வார தொடக்கத்தில், ஒன்ராறியோவின் சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ், தினசரி அறிவிக்கப்படும் புதிய COVID-19 நோயாளர் எண்ணிக்கை பூட்டுதல் (lockdown) மற்றும் வீட்டில் இருக்கும் உத்தரவுகளை நீக்குவதற்கு முன்பு “1,000 அல்லது அதற்கு கீழே” இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஒன்ராறியோவில் இன்று வியாழக்கிழமை 2,600 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 நோயாளர் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.