Reading Time: < 1 minute வடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகில் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கான தடையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முற்றாக நீக்கியுள்ளார். இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைக்கவும் கொழும்புRead More →

Reading Time: < 1 minute அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்ளவில்லை 305.43 ஆகவும் விற்பனை விலை 318.79 ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி டொலரின் பெறுமதி 362.66 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வ இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கோவில் முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை ஜூன் 12 ஆம் திகதி மீண்டும்Read More →

Reading Time: < 1 minute உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் கடன் திருப்பி செலுத்தலை நிறுத்தியுள்ள இலங்கை தற்போது பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வகுத்து வருகின்றது. இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் ஒரு பெரிய தளவாட வளாகத்தில், 392 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டைக் கொண்ட சீனா வணிக குழுவின் முதலீடொன்று முன்னெடுக்கப்படுகின்றது.இது தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பாரிய வெளிநாட்டு முதலீடாகும். தளவாட மையத்திட்டம் இலங்கையின் வருமாதத்திட்டம்Read More →

Reading Time: < 1 minute முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.Read More →

Reading Time: < 1 minute 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்தRead More →

Reading Time: < 1 minute 33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046Read More →

Reading Time: < 1 minute முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரேRead More →