Reading Time: < 1 minute இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டதாக கனடா தெரிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர முரண்பாட்டு நிலைமைகளை தொடர்ந்து இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து ராஜதந்திரிகள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். சீக்கிய ஆன்மீக தலைவர் ஹார்தீப் சிங் படுகொலை சம்பவம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியது. கனடாவிற்கான இந்திய ராஜதந்திரிகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வெறுப்புணர்வை தூண்டும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான வெறுப்புணர்வு குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. டொரண்டோ போலீசார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெறுப்புணர்வை தூண்டும் குற்றச் செயல்கள் தொடர்பில் வழமையாக கிடைக்கும் தொலைபேசி முறைப்பாடுகளை விடவும் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்க பெறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இஸ்ரேல் – ஹமாஸ் போர்Read More →

Reading Time: < 1 minute இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. அது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், “இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வRead More →

Reading Time: < 1 minute கனடாவில் போலீசாரை போன்று போலி மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய போலீஸ் உத்தியோகத்தர்களின் பெயர்கள் அவர்களின் பதவிகள் போன்றவற்றை குறிப்பிட்டு தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் வருமான விபரங்கள் போன்றன திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. போலீசார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினர் இவ்வாறு மின்னஞ்சல்களை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இந்த தகவல்களை வழங்காவிட்டால் நடவடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பல்வேறு இடங்களில் பலஸ்தீன போராளிகளுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டொரன்டோ, கல்கரி, வான்குவர், வினனிபெக், ஹாலிபெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தை விடுதலை செய் என்ற கோஷத்துடன் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டொரன்டோவில் அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதேவிதமாகRead More →

Reading Time: < 1 minute தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் தீவிரவாத தாக்குதல்கள் கொண்டாடப்படுவதனை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வன்முறைகள் போற்றப்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு பேரணிகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வன்முறைகளை போற்றும் வகையில் எந்த ஒரு குழுவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் செயல்படக்கூடாது என அவர் twitter பதிவு ஒன்றின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் எட்மோன்டன் நகர மேயர் அமர்ஜித் சோய், காஸா – இஸ்ரேல் போர் தொடர்பில் கருத்து வெளியிட்டு சிக்கல் மாட்டிக் கொண்டுள்ளார். மேயர் அமர்ஜித் சோய் வெளியிட்ட கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக எட்மோன்டன் வாழ் யூத சமூகத்தினர் மேயர் அமர்ஜித் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தரப்பினர் மீதும் தவறு உள்ளது என்ற அடிப்படையில் மேயர் அமர்ஜித்Read More →

Reading Time: < 1 minute இஸ்ரேலில் தங்கியுள்ள கனடியர்கள் நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். விமான மூலம் இவ்வாறு கனடியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வரும் பின்னணியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் தெல் அவீவிலிருந்து கனடியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கனடியRead More →

Reading Time: < 1 minute அண்மையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டு கனடியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த வேளையில், ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இரண்டு கனியர்கள் உயிரிழந்தனர். வான்கூவாரைச் சேர்ந்த 22 வயதான பென் மிஸ்ராஜி மற்றும் ஒன்றாரியோவைச் சேர்ந்த 33 வயதான அலெக்சாண்டர் லுக் ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர். இஸ்ரேலில் கொல்லப்பட்ட இந்த இரண்டு கனடியர்களுக்காகவும் நினைவஞ்சலிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ராணுவப் படையினர் மத்தியில் கடுமையான வறுமை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேகமான படையினர் தங்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்ய முடியாது அவதியறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான படையினர் உதவிகள் கோரி நிற்கும் நிலை காணப்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் Wayne Eyre தெரிவித்துள்ளார். லாப நோக்கமற்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் படையினருக்கு உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில படையினர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் உணவு வங்கிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. நன்றி அறிதல் வாரம் அல்லது தேங்க்ஸ் கிவிங் வாரத்தில் இவ்வாறு அதிக அளவில் உணவு வகைகளை மக்கள் நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண வீக்கம், வீடுகளுக்கான வாடகை கட்டண அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணிகளினால் நாட்டில் உணவு வங்கிகளின் தேவை அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக ரொறன்டோவில் இயங்ககி வரும் ஓர் உணவு வங்கியில்Read More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்ததாகவும், 10 பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறு பாலமே இவ்வாற உடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய பாலம் இடிந்து வீழ்ந்த போதிலும் மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute இஸ்ரேல், காசாவுக்கிடையில் மோதல் தொடரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் காசாவில் வாழும் கனேடியர்களுக்கு கனடா எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துக்கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவரும் நிலையில், பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் என்னும் அமைப்பு, கடந்த சனிக்கிழமை காலை, காசா பகுதியிலிருந்து திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 700க்கும் மேற்பட்டவர்கள், பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தார்கள். இஸ்ரேல் திருப்பித் தாக்க, காசா தரப்பில்Read More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின சமூகத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர் போதைப் பொருள் பயன்படுத்துவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, கலாச்சார ரீதியாக, மற்றும் சுகாதார ரீதியாக போதை மருந்து பயன்பாடுRead More →