Reading Time: < 1 minute

எட்டோபிகோவில் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை திரையிட்ட அல்பியான் சினிமா (Albion Cinema) இரண்டு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று மாலை (ஏப்ரல் 28, 2023) திறந்துவைக்கப்பட்டது.

இதில் மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் உட்பட திரைத்துறையினர், தொழிலதிபர்கள், திரைப்பட ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மிகப்பெரும்திரை, டால்பி அட்மாஸ் ஆடியோ (dolby atmos audio) மற்றும் வசதியான இருக்கைகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த சினிமா திரையரங்காக இது இப்பொழுது விளங்குகின்றது.

கன்செர்வேர்டிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre இன் வாழ்த்து செய்தியுடன் திரையரங்கு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையிடப்பட்டது.

Photo Credits: Ninaivukal Gana Arumugam – More Photos Click Here