Reading Time: < 1 minute கியூபெக்கில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பும் போது, 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பொதுவான பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என கியூபெக் கல்வி அமைச்சர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் ராபர்ட் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் புதுப்பிப்பை வழங்கிய போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி உட்பட முகக்கவசங்கள் கட்டாயமாக இருக்கும். முகக்கவசங்களை பாடசாலைகள் பேருந்துகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 230பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 451ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 981பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 742பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 728பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute பெயிரூட் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கல்கரியில் உள்ள அல்பர்ட்டா முஸ்லிம் சமூக சங்கத்துடன் அவாடா தன்னார்வலர்கள், நன்கொடைகளை சேகரித்து வருகின்றனர். உணவு, உடை மற்றும் மருத்துவ பொருட்களை அவர்கள் பெறுனர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். 5 மில்லியன் டொலர் வரை மனிதாபிமான உதவிகளை லெபனானுக்கு அனுப்பப்போவதாக கனடா அறிவித்துள்ளது. புள்ளிவிபர கனடாவின் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனானில் 10,300க்கும் மேற்பட்ட அல்பர்டான்கள் பிறந்துள்ளனர். அவர்களில், 4,000க்கும் அதிகமானோர் கல்கரியில்Read More →

Reading Time: < 1 minute பெயிரூட் பேரழிவினால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ள டசன் கணக்கான மக்கள், அட்ரெமொண்டில் உள்ள லெபனான் துணைத் தூதரகத்திற்கு வெளியே போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தற்போதைய லெபனான் ஆட்சியின் நியாயத்தன்மையை அங்கீகரிப்பதை நிறுத்துமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், கனேடிய அதிகாரிகளுக்கு ஆட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் கனடாவில் உள்ள தூதர் மற்றும் மொன்றியலில் உள்ள தூதரகத்தை வெளியேற்ற வேண்டும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 221ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 976 ஆக உயர்வடைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 561ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 966பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 489பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 106பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்ததற்காக கனேடியருக்கு மரண தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கனடா-வன்கூவர் பொலிஸார், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கைது செய்தமைக்கு பிறகு பதிவான நான்காவது மரண தண்டனை உத்தரவாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது கனேடியருக்கு மரண தண்டனை சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 187ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 962பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 437பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 788பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute பெயிரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கம் 5 மில்லியன் டொலர் வரை நிவாரணம் அளிக்கிறது. வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவச் சேவைகள், தங்குமிடம் மற்றும் உணவு வழங்க இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று கனேடிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் பெயிரூட்டில் உள்ள மனிதாபிமான அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது. கனடா இந்த கொடூரமானRead More →