Reading Time: < 1 minute

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனடாவின்மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மொத்த மக்கள் தொகை நாற்பது மில்லியனாக பதிவாகும் என புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாக இவ்வாறு மக்கள் தொகை நாற்பது மில்லியனாக பதிவாகும் என தெரிவித்துள்ளது.

கனடிய தினம் அனுஸ்டிக்கப்பட உள்ள நிலையில் மக்கள் தொகையில் இவ்வாறான ஓர் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதானி அனில் ஆரோரா தெரிவித்துள்ளார்.

ஜீ7 நாடுகளின் சனத்தொகை வளர்ச்சியில் கனடா முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 2.7 வீதமாக பதிவாகியுள்ளது.

இது 1957ம் ஆண்டின் 3.3 வீதத்தின் பின்னரான அதி கூடிய மக்கள் தொகை வளர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.