Reading Time: < 1 minute

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி, இவ்வாறு ரஷ்ய தூதுவரை அழைத்துள்ளார். உக்ரைனில் சிவிலியன் நிலைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் டினிரிப்போவில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 45 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர்.

ரஷ்ய படையினர் எப்படியாவது போரை வென்றெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் போரில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறான சூழ்நிலையிலும் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்கள் மீது இலக்கு வைக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.