Reading Time: < 1 minute

ரஷ்ய அரச தொலைக்காட்சி சேவையான ஆர்.ரி. (RT) மற்றும் ஆா்.ரி. பிரான்ஸ் (RT France) ஒளிபரப்புக்கு கனடா அரசு நேற்று புதன்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

கனேடிய தர நிலைகளுடன் ஆர்.ரி. ஒளிபரப்பு சேவை ஒத்துப்போகவில்லை எனத் தெரிவித்தே இந்தத் தடை அமுல் செய்யப்பட்டது.

மற்றொரு நாட்டின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், ஒரு குறிப்பிட்ட இனப் பின்னணியில் உள்ள கனடியர்களை இழிவுபடுத்தும் மற்றும் கனடாவில் உள்ள ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலான ஆா்.ரி. தொலைக்காட்சி சேவை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக கனடிய வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவை ஆணையம் நேற்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த படையெடுப்பிற்கு பின்னர் கனடாவில் உள்ள முக்கிய வலையமைப்புக்கள் ஏற்கனவே தங்கள் சேவையில் இருந்து ஆா்.ரி. தொலைக்காட்சியை நீக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.