Reading Time: < 1 minute

றொரன்டோ பொதுப் போக்குவரத்து சேவையில் அதிரடியாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

றொரன்டோ ட்ரான்சிட் கமிஷன் அல்லது ரீ.ரீ.சீ பொதுப் போக்குவரத்து சேவையில் இவ்வாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

றொரன்டோ நகரில் சுமார் 50 பாதுகாப்பு படையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக 20 சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் மீது திடீர் தாக்குதல்கள் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

அண்மைய நாட்களாகவே ரீ.ரீ.சீ பொதுப் போக்குவரத்து சேவையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை அவதானிக்க முடிகின்றது.

நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதேவேளை, உளச்சுகாதார பிரச்சினைகள், வீடற்றவர்களின் பிரச்சினைகள், மிதமிஞ்சிய போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்சினைகளின் போது இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையை வழங்க உள்ளனர்.

வீடற்றவர்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.