Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ விபத்து காரணமாக 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத்தீ காரணமாக சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவு மிக அதிகம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் மொத்த சேத விபரங்கள் பற்றிய துல்லியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சில பகுதிகளில் சேதம் பற்றி இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 110 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காட்டுத்தை பறவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதி வாழ் மக்கள் தங்களுடைய சொத்துக்கள் தொடர்பில் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர்.

கட்டுக்கடங்காத நிலையில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாகவும் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.