Reading Time: < 1 minute

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில், காணொளி காட்சி வாயிலாக முக்கிய பேச்சுவார்தையொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, கொவிட் -19, காலநிலை மாற்றம், சீனாவுடனான போட்டி, நேட்டோ மற்றும் தேசியப் பாதுகாப்பு- ஆர்க்டிக் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாவதித்தனர்.

இருவருக்கும் இடையில் இரண்டு மணி நேர பேச்சுவார்தையின் பின்னர், இருவரும் இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினர்.
இதன்போது கருத்துதெரிவித்த ஜோ பைடன், ‘கனடியர்களும், அமெரிக்கர்களும் புதுமையானவர்கள், ஆக்கபூர்வமானவர்கள்,

தொழில்முனைவோர், போட்டி, திறந்த மனதுடையவர்கள். நாம் அதற்கு நம்மை அர்ப்பணிக்கும்போது நம்மால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை’ என கூறினார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘கனடாவும், அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்கள். மிக முக்கியமான வர்த்தக பங்காளிகள் மற்றும் பழமையான நண்பர்கள். இந்த தொற்றுநோயை வென்று ஒரு சிறந்த நாளை உருவாக்க நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். பைடனை விரைவில் சந்திப்பேன் என நம்புகின்றேன்’ என கூறினார்.

இரு உலகத் தலைவர்களும் 2016ஆம் ஆண்டில் பைடன் துணைத் தலைவராக இருந்தபோது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.