Reading Time: < 1 minute

கடந்தவார இறுதி நாட்களில் றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் றொரன்டோ மேயர் ஜோன் டோரி கவலை வெளியிட்டுள்ளார்.

வார இறுதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

எல்லா வகையிலான துப்பாக்கி வன்முறைகளும் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

15 வயது சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச் செயல் தொடாபில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையிலான துப்பாக்கி வன்முறைகளையும் நிராகரிப்பதாகவும் ஏற்றுக்கொள்ள மடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதிகளில் கூடுதல் பொலிஸ் ரோந்துப் பணிகளை முன்னெடுத்து குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என றொரன்டோவின் மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.