Reading Time: < 1 minute

தனிப்பட்ட தகவல்கள் களவாடப்படுவதாக கனடியர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களை விடவும் தற்பொழுது தனிப்பட்ட தரவுகள் அம்பலமாகும் சாத்தியங்கள் அதிகம் என அநேக கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இன்டரெக் என்னும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

77 வீதமான கனடியர்கள் தங்களது தரவுகள் களவாடப்படுவதாக கருதுகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான இணைய வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட தரவுகளுக்கு பாதுகாப்பு கிடையாது என கருதுகின்றனர்.

இணைய வழியில் கடந்த 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தரவுகளை கையாளும் நிறுவனங்கள் பயனர்களின் தரவுப் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.