Reading Time: < 1 minute

செங்கடலில் இடம்பெற்று வரும் கப்பல் மீதான தாக்குதல்களின் எதிரொலியாக கனடாவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

யேமனின் ஹ_தி போராளிகள் செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்கள், கனடிய கப்பல் நிறுவனங்களையும் நுகர்வோரையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசா பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஹ_தி போராளிகள், இவ்வாறு வர்த்தக கப்பல்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநேகமான கப்பல் சேவை நிறுவனங்கள் குறித்த கடல் பாதையிலான பயணங்களை தவிர்த்து வருகி;ன்றன.

தாக்குதல்கள் காரணமாக கப்பல் கட்டணங்கள் அதிகரிக்கும் எனவும் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கட்டண அதிகரிப்பானது பொருட்களின்விலைகள் அதிகரிக்கச் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, அமெரிக்கா உள்ளி;ட்ட பல நாடுகள் செங்கடலில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.