Reading Time: < 1 minute

சுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பத்திரமாக பயணப் பாதைக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக இஞ்ச்கேப் ஷிப்பிங் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.

400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல் அதிகாலை 4.30 மணிக்கு நகரத் தொடங்கியதாக இஞ்ச்கேப் தெரிவித்துள்ளது.

எவர்கிரின் கப்பல், காற்றின் அதிக வலுக்காரணமாக மிகவும் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றான எகிப்து வழியாக செல்லும் இந்த கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடுமையான போராட்டத்தின் பின், கப்பல் பயணப்பாதைக்கு திரும்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக பயணிக்க காத்திருந்தன.

அவற்றில் டசன் கணக்கான கொள்கலன் கப்பல்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) அல்லது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) கப்பல்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமை கால்வாய் அதிகாரிகள் சுமைகளை குறைக்கும் பொருட்டு கப்பலில் இருந்த சுமார் 20,000 கொள்கலன்களை அகற்றினர்.