Reading Time: < 1 minute

சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில் அனைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்ட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது.

சீனத் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணம்.

கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடிய அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களை மாத்திரதே கனடா நுழைய அனுமதித்தும் வருகின்றது.

அந்த வகையில் Pfizer-BioNTech ,Moderna, AstraZeneca, Janssen/Johnson & Johnson போன்ற தடுப்பூசிகளை மாத்திரமே கனடா அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.