Reading Time: < 1 minute

சட்டவிரோத குழுக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக 54 மில்லியன் டொலர்களை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பினை மத்திய குற்றத் தடுப்பு அமைச்சர் பில் பிளையர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“ஒன்றாரியோவில் மேற்கொண்டு வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடன் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளது.

துரதிஸ்டவசமாக அண்மைய நாட்களில் நாடு முழுவதும், குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் துப்பாக்கி வன்முறைகள் மற்றும் சட்டவிரோத குழுக்களின் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

இது எமது சமூகத்தை வெகுவாக பாதிக்கிறது என்பதுடன், கனேடியர்கள் தமது வாழ்க்கையை இவ்வாறான சம்பவங்கள் பாதிக்கின்றன” என கூறினார்.