Reading Time: < 1 minute

காசாவில் நிவாரணப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய படையினர் நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தி வேர்ல்ட் சென்ட்றல் கிட்சன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் அமெரக்க கனடிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.