Reading Time: < 1 minute

கனடாவில் கொல்லப்பட்ட கனேடியரின் கூட்டாளியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், வெளிநாட்டினரின் தலையீடு உறுதி செய்யப்படவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இம்மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி அதிகாலை, சிம்ரஞ்சீத் சிங் என்பவருடைய வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது.

அதற்கு இந்தியாதான் காரணம் என கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில், அந்த தாக்குதலில் வெளிநாட்டினரின் தலையீடு இருப்பது உறுதி செய்யப்படவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த தாக்குதல் தொடர்பாக, 16 வயதுள்ள இருவர் இம்மாதம் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் 18 வயதுக்குக் குறைவான வயதுடையவர்கள் என்பதால், அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட வீட்டின் உரிமையாளரான சிம்ரஞ்சீத் சிங், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங்கின் கூட்டாளி ஆவார். இந்த ஹர்தீப் சிங் கொல்லப்பட்டதைத் தொடர்ந்துதான் இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.