Reading Time: < 1 minute

கனடிய வாழ் ஹெய்ட்டி சமூகம், கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

தாய்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு உதவுமாறு ஹெய்ட்டி புலம்பெயர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹெய்ட்டியில் பாரியளவில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தலைநகரை ஆயுதக் குழுக்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஹெய்ட்டி புலம்பெயர் சமூகம் குறிப்பிட்டுள்ளது.

ஹெய்ட்டி பிரதமர் எரியல் ஹென்றி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண, கனடிய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென மேலும் கோரியுள்ளனர்.

கியூபெக் கலச்சார நிலையத்தில் ஒன்று கூடிய ஒன்று கூடிய ஹெய்ட்டி புலம்பெயர் சமூகத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.