Reading Time: < 1 minute

கனடிய பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாதகமான நிலைப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம், சாதகமாக அமையும் என மக்கள் கருதவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொல்லோரா ஸ்டேடஜிக் இன்சைட்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்த இணைய வழி கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அநேகர், நாட்டின் பொருளாதாரம் குறித்து சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகளவு வட்டி வீதம் போன்ற காரணிகளினால் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என 83 வீதமான மக்கள் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை இன்னமும் ஏற்படவில்லை.

மக்கள் மத்தியில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதான ஓர் நிலைப்பாட்டை அவதானிக்க முடிவதாக கருத்து கணிப்பு மேற்கொண்ட நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.