Reading Time: < 1 minute

அண்மையில் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பார்ஹேவனின் பால்மாடியோ பூங்காவில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாய் ஒருவரும், நான்கு பிள்ளைகளும் மற்றுமொரு நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.

பூங்கொத்துக்கள், டெடிபியர்கள் உள்ளிட்ட பொம்மைகள், பலூன்கள் என பல்வேறு பொருட்கள் பூங்காவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் சமூகத்தை மட்டுமன்றி நாட்டையும் ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கியதாக கனடிய பெளத்த விஹாரை ஒன்றின் விஹாராதிபதி பன்தே சுனீத தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் நகர மேயர் மார்க் சுட்கிளிப், நகரின் பொலிஸ் நிலையப் பிரதானி, கனடாவிற்கான இலங்கைத் தூதுவர் உளளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.

உயிரிழந்தவர்களின் இறுதிகள் கிரியைகள் கனடாவிலேயே மேற்கொள்ளப்பட உள்ளது.

இறுதிக் கிரியைகளை நடாத்தும் அதிகாரத்தை பௌத்த விஹாரக்கு, குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் தந்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.