Reading Time: < 1 minute

கனடாவில் மோசடியில் சிக்கிய வங்கி வாடிக்கையாளர் ஒருவர் ஏனையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் நபர் ஒருவர் தம்மை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மொன்றியால் வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய ஸ்காப்ரோவைச் சேர்ந்த ஏஞ்சலா பெங் என்ற பெண்ணே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் விசாரணை நடத்தி பணம் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தம்மிடமிருந்து சுமார் 17,000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு, வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி வங்கி அட்டை இலக்கத்தை பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதாகவும் இதனை நிறுத்தப் போவதாகவும் குறித்த நபர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

வங்கி அட்டை இலக்கத்தை வழங்கிய ஒரு மணித்தியாலத்தில் சிறிய தொகைகளுக்கு மூன்று மின்-பரிமாற்றங்களும் $14,000 ஒரு கம்பி பரிமாற்றமும் (Wire Transfer) செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமது வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக $17,382 டொலர்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.