Reading Time: < 1 minute

கனடாவில் வீட்டு விற்பனை தொடர்பிலான மோசடிகள் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடிகாரர்கள் வீட்டு உரிமையாளர்கள் போன்று மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ ரியல் எஸ்டேட் பேரவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளை விற்பனை செய்வதாக வீட்டு உரிமையாளர்கள் போன்று தோன்றி மோசடிகாரர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிச் சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு விற்பனையாளர்களின் ஆள் அடையாளம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடு விற்பனை செய்வதற்காக பதிவு செய்யும் போது, சரியான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பதனை பதிவு செய்யும் தரப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரமாக வீட்டை விற்பனை செய்ய முயற்சிப்பவர்கள் மற்றும் வழமைக்கு மாறாக குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சில பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முன்னதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.