Reading Time: < 1 minute

கனடாவில் வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்னமும் ஏழு மில்லியன் கனடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய வருமான முகவர் நிறுவனம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் சுமார் பத்து வீதமான கனடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்வதே இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மொழிப் பிரச்சினை அல்லது அறியாமை காரணமாக இவ்வாறு வரி செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வரிக்கோப்புக்களை தாக்கல் செய்யத் தவறும் கனடியர்களுக்கு அரசாங்கத்தின் எவ்வித சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வரிக் கோப்புக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.