Reading Time: < 1 minute

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம், நாடு முழுவதிலும் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.

இதுவரையில் இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் 40 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி உரிய நேரத்தில் ஏற்றப்படுவுதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோய் அதிக வேகமாக பரக்கூடிய தன்மையுடையது என டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.