Reading Time: < 1 minute

கனடாவில் கடும் குளிரில் காத்திருந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏதிலி முகாமொன்றில் தங்கியிருப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த பெண் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கென்யாவைச் சேர்ந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான டெல்பினா நிகி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிஸ்ஸிசாகாவில் ஏதிலி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக குளிரில் வெளியே காத்திருந்த நிலையில் இவ்வாறு பெண் உயிரிழந்துள்ளார்.

ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நீண்ட நேரம் குளிர்ந்த காலநிலையில் வெளியே காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேரம் வெளியேற கடும் குளிரில் காத்திருந்த பெண், இறுதியில் முகாமிற்கு அழைத்துச் சென்ற போதிலும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளரின் சடலத்தை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க நிதி திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு கூடுதல் அளவில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.