Reading Time: < 1 minute

கனடாவில் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் களவாடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் நிதியியல் மற்றும் குத்தகை ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் றொரான்டோவில் மட்டும் 9606 வாகனங்கள் காளவாடப்பட்டுள்ளன.

இது கடந்த 2015ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்கு அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டில் ஒன்றாரியோ மாகாதண்தில் மட்டும் 27495 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன.

றொரன்றோவில் மட்டுமன்றி நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாகன திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதகாத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் போதியளவு தெளிவுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனத் திருட்டுக்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதில் அல்லது நடவடிக்கை எடுப்பதில் கால தாமதத்தை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.