Reading Time: < 1 minute

கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை அனிதா ஆனந்த பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய இராணுவ உயர்மட்டத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியைக் கையாண்டது குறித்து பல மாதங்களாக விமர்சனங்களை எதிர்கொண்ட முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஹர்ஜித் சஜ்ஜனிடமிருந்து அனித ஆனந்த் வசம் பாதுகாப்பு அமைச்சு கைமாறியுள்ளது.
அனிதா ஆனந்த் முன்னர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் அமைச்சராக இருந்தார். தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் தடுப்பூசிக் கொள்வனவில் அவரது பணி மிகச் சிறப்பாக இருந்ததாக பாராட்டப்பட்டார்.

லிபரல் கட்சி சார்பில் ஓக்வில்லி (oakville) தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 14,511 வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.

அனிதா கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். இவரது தந்தை தமிழகம் – வேலுரைச் சேர்ந்தவராவார். தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

அனிதா ஆனந்த் ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.