Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவ்மொன்று பதிவாகியுள்ளது.

உயர்நிலைப் பள்ளியொன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் 23 வயதான மகனே இவ்வாறு காரியில் தனித்து விடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடுமையான வெப்பநிலையில் காரிற்கு உள்ளே இருந்த நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக காலையில் அழைத்து வந்த குறித்த ஆசிரியை, சிறுவனை காரிலேயே விட்டு விட்டு மாணவர்களுக்கு கற்பிக்கச் சென்றுள்ளார்.

பின்னர் திடீரென சென்று காரை திறந்து பார்த்த போது சிறுவன் சலனமற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாயின் கவனயீனம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் அதிக வெப்பநிலையுடனான காரில் நீண்ட நேரம் இருந்த காரணத்தினால் சிறுவன் மரணத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தற்போதைக்கு எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிட்டு கூற முடியாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.