Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய்ப் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதிலும் பதிவான தட்டம்மை நோயாளர்களை விடவும் இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோவில் கூடுதல் எண்ணிக்கை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இந்தியா சென்று திரும்பிய குழந்தையொன்று தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹமில்டன் பொதுச் சுகாதார திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோ மாகாணத்தில் மட்டும், எட்டு தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு முழுவதிலும் ஒன்றாரியோ மாகாணத்தில் ஏழு தட்டம்மை நோயாளர்களே பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத ஆரம்பத்தில் நாடு முழுவதிலும் 17 தட்டம்மை நோயாளிகள் பதிவாகியிருந்தனர் என சுகாதார தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றாரியோவில் தட்டம்மையினால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

எனினும் இரண்டு பேருக்கு எவ்வாறு தட்டம்மை பரவியது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை.