Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் காணாமல் போன எட்டு வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Leona Furgason என்னும் பெண், தனது உறவினரான ஒரு பையன், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்குச் சென்றபோது, 8 வயது சிறுமி ஒருத்தியை அவரது சித்தி தாக்கியதைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது சித்தி அந்த சிறுமியின் தலையைப் பிடித்து சுவரில் மோதியடித்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து Leona பொலிசாரை அழைத்துள்ளார்.

ஆனால், பொலிசார் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் அந்த சிறுமி இல்லை. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஆகவே, அந்த வீட்டிலிருந்த 27 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர் மீது, அந்த சிறுமியை கொலை செய்ததாகவும், அவரது உடலுக்கு ஊறு விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றச்செயலில் அந்தப் பெண்ணுக்கு உதவியதாக, 66 வயது ஆண் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்து வரும் நிலையில், பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.