Reading Time: < 1 minute

பிரான்ஸ் தம்பதியினருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர் கனடா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்ஸ் தம்பதியினர் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் கீழ் ஏர் கனடா நிறுவனம் எதிராக 22 குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், பிரெஞ்சு மொழி பேசுபவர்களின் மொழி உரிமைகளை ஏர் கனடா நிறுவனம் மீறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி Martine St-Louis, முறைப்பாடு செய்த இருவரிடமும் மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு ஏர் கனடா நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், 21,000 டொலர்கள் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.