Reading Time: < 1 minute

இலங்கை தூதுவராக நியமித்தவரை ஏற்றுக்கொள்வதை கனடா தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி எயர்சீவ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர்பதவிக்களுக்கான குழு கடந்த வருடம் நவம்பர்மாதம் ஒன்பதாம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் அவரது நியமனத்தை அங்கீகரிப்பதை கனடா தாமதப்படுத்துகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகளில் ஒன்று கனடா என்பதையும் இலங்கையில் பாதுகாப்புதுறை சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என கனடா குரல்கொடுத்து வருவதையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கவனிக்கதவறிவிட்டது என ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கனடாவின் பல நகரங்களில் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆங்கில வார இதழ் இந்த நியமனம் இலங்கையின் நலன்களிற்கு உகந்தது இல்லை நியமிக்கப்பட்டவரின் நலன்களிற்கும் உகந்தது இல்லை என தெரிவித்துள்ளது.