Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் புரட்டியெடுத்த புயலால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் முழுமையாக சீராக மேலும் பல நாட்கள் தேவைப்படலாம் எனவும், மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் ஒட்டாவா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் மின் விநியோக கட்டமைப்பு முழுமையாக சேதமடைந்துள்ளது எனவும், புயலால் 187 மின் கம்பங்கள் சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மின் விநியோகம் தடைபட்டுள்ளதால் மாவட்ட பாடசாலை நிர்வாகம், தங்கள் கீழில் செயல்படும் அனைத்து பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்களை செவ்வாய்க்கிழமை முதல் மூட வலியுறித்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஹைட்ரோ ஒட்டாவா வெளியிட்டுள்ள அறிக்கையில், 115,000 வாடிக்கையாளர்கள் இன்னும் மின் விநியோகம் தடைபட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஹைட்ரோ வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 148,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், செவ்வாய்க்கிழமை காலை வரையில் 140,000 வாடிக்கையாளர்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக Hydro-Quebec தெரிவித்துள்ளது.